ஞாயிறு, 14 டிசம்பர், 2008

சுரணை லேகியம் ஏதும் உண்டா?

நாம் எல்லாம் தமிழர்கள் ...அல்லது tamilians....or madrasis!!! ஏதோ ஒரு கழுதை .."கழுதை வெட்டயில் முன் வெட்டைஎன்ன பின் வெட்டை என்ன " என என் மாமனார் ஊரில் ஒரு சொல் உண்டு!
விஷயத்துக்கு வருவோம் ..மும்பையில் ரணகளமாகி மக்கள் மரண பயத்தில் நடுங்கின நேரத்திலும் நம்மவர்கள் சரவணபவனில் தயிர்வடை சாப்பிட்டுக்கொண்டே THE HINDU வில் ஏப்பம் விட்ட படி "it's very bad ...what is happening in this country?? என்ன சார் மனுஷாள் உயிருக்கு காபந்து இல்லே.. இந்த தேசத்துலே.. what protection this country is givin to its citizens??!!" அதோடு சரி. இருக்கவே இருக்கிறது அசத்தபோவது யாரும் மற்றும் மிட் நைட் மலங்களும்...
கூடவே சேர்ந்து கொண்டது தொடர் மழை ..யாருக்கும் அவர் அவர் குண்டி நனைவது தவிர வேறேதும் கவலைக்குரியதாயில்லை!! அதே நாட்களில்
என் அப்பா கடலூரில் திருவந்திபுரம் போகும் வழியில் மலை அடிவாரத்தில் 15 லட்சத்தில் கட்டி முடித்த என் தம்பியின் மாடி வீட்டின் மார்பில் தரையில் சுகமாய் உட்கார்ந்து கொண்டு மும்பை கலவரங்களின் எந்த பாதிப்பும் இன்றி என்னோடு போனில் கோபிக்கிறார் "இவ்வளோ மழை பெய்யுதே என்ன ஆச்சு ..எப்படி இருக்கீங்க ன்னு ஒரு விசாரிப்பு உண்டா?"
ஆக மொத்தம் ஒரு உண்மை புரிகிறது.. இரண்டாம் உலக போர் முதல் கார்கில் வரை தமிழன் வாழ்க்கை எந்த தவிப்பும் தடங்கலும் இன்றி சுகமாய் புசித்தலும் புணர்வதுமாய் அவனை வைத்திருக்கிறது! இதே குண்டு வெடிப்புகள் /துப்பாக்கி சூடுகள் சென்னை சென்ட்ரல் அல்லது எக்மோர் ஸ்டேஷன் மற்றும் ரங்கநாதன் தெருவிலோ நடந்திருந்தால் எத்தனை களேபரமாகி இருக்கும்?? தமிழ் குடிமகன்கள் இவற்றை எல்லாம் "சங்கர் சார் ,Moneyரத்னம்சார் " படங்களில் பார்த்ததோடு சரி அதனால் தான் ஈழ தமிழர்க்கு ஒப்பாரி கவிதை பாட முடிகிறது!!
இன்று star movies இல் "HOLI SMOKE" என்றொரு படம் பார்க்க நேர்ந்தது ...இந்திய உடை இந்து கலாச்சாரம் இந்து கடவுள்கள் சாமியார்கள் என எல்லோரையும் தரம் தாழ்த்தி போகிற போக்கில் இந்திய பெருமை பேசுகிற படம் என ஒரு பிரம்மை உண்டாக்குகிற படம்..அச்சு அசல் நம்ம "moneyரத்னம் சார் " பண்ணின ரோஜா, பாம்பே, உயிரே போன்ற , கயவாளித்தனம் வெளித்தெரியாமல் வியாபார புத்திசாலிமேல் பூச்சுடன் பண்ணப்பட்ட "சமூக அக்கறை" உள்ள படங்கள் போன்றது!
இன்னமும் டிசம்பர் மாதத்தில் மங்கி குல்லாவும் மடித்து கட்டின வேட்டியுமாய் கரோல் பாக் மார்க்கெட்டில் "இங்லீசில்"பேரம் பேசும் தமிழ் குடிமகன்களை பார்க்க நேரிடுகிறது!!
என் பொண்ணு மகள் சமீபமாய் தமிழ் டிவி பார்த்து கற்றுக்கொண்ட வார்த்தைகள்....."முடிச்சவிக்கி..,மொள்ளமாரி..பேமானி ..கேப்மாரி!"
வாழ்க தமிழ்!

1 கருத்து:

  1. சில காலமாகவே மனதை உறுத்துகிற ஒரு சமாசாரம் " தமிழன் ஒழுக்கம் கெட்ட ஒரு இனமா?" என்பதுதான்.... தமிழகத்தில் தமிழனிடம் சுய ஒழுக்கமும் இல்லை சமூக ஒழுக்கமும் இல்லை.... முக்கியமாக பொது ஒழுக்கம் இல்லவே இல்லை......

    எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்த தமிழினம்..... தெருவில் நடப்பது, அருகில் நடப்பது, ஊரில் நடப்பது, நகரில் நடப்பது, மாவட்டத்தில் நடப்பது, மாநிலத்தில் நடப்பது - இடை குறித்து எந்த நெருடலும் கிடையாது..... நம் வேலை முடிந்தால் போதும் ... சில மாதங்களுக்கு முன்பு இதை அமலாவுக்கு உணர்த்துவதற்காக என்னுடைய மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு 15 அடி அகலமே உள்ள சாலையில் நட்ட நடுவில் நிறுத்திவிட்டு நானும் அமலாவும் மாடியில் நின்று பார்த்தோம்.... இருபக்கமும் போகிறவர்கள் அனைவரும், அது மோட்டார் சைக்கிள்ஆக இருக்கட்டும் அல்லது ஆட்டோ ரிக்க்ஷா, நான்கு சக்கர வாகனமாக இருக்கட்டும் ..... ஒருத்தனுக்கும் அதை பற்றி அக்கறை இல்லை.... ஏன் அதை ஒரு பிரச்சினையாக கருதவே இல்லை .... எனக்கு செம்மறி ஆட்டு கூட்டத்தை பார்ப்பது போல வேடிக்கையாக இருந்தது .... கடைசியில் எனக்கு கோபம் வந்து நானே போய் வண்டியை எடுத்து ஓரமாக நிறுத்தியதுதான் மிச்சம் ...... நான் போகிற வழியில் இப்படி வண்டி நிறுத்தி இருந்தால் குறைந்த பட்சம் அந்த வண்டியை ஓங்கி ஒரு மிதிஆவது மிதித்து விட்டுத்தான் சென்று இருப்பேன்......

    பதிலளிநீக்கு