செவ்வாய், 18 ஜனவரி, 2011
மெல்லிய குறுந்தகடில் இருந்து
வெளி வந்து புரிந்த
தூரதேசத்து
ஆண்கள் பெண்களின்
நீண்ட கலவிகளில்
கலந்திருந்தேன்
கௌரவ விருந்தினராக
இரு வெள்ளைப் பெண்களும்
ஒரு கருப்பு இளைஞனும்
உச்சத்தை நெருங்கிய கணத்தில்
சட்டென மறைந்தனர்
மின்சார வெட்டில்
காற்றில் கரைந்திருந்த
கலவிகளின் ஒலிகளுடனும்
கனவுகளில் மிதந்த
கலவிகளின் நினைவுகளுடனும்
நிகழ்ந்து முடிகிறது
தவறவிட்டுவிட்ட
ஒரு தனிமையின் உச்சம்!

"கோ நா" என்கிற யாரோ ஒருவர் எழுதி போன வார விகடனில் வெளிவந்த கவிதை இது!
சந்தோஷமாய் இருக்கிறது... விகடனில் இது போன்ற கவிதை வெளிவந்ததில்! நீலப்படம் பார்த்தல் அதன்பின் சுய இன்ப அனுபவங்கள் என அதிகம் பேச பயந்த நம் வெகுஜன பாச்சாண்டி ஊடகங்கள் சற்றே தெளிந்திருக்கின்றன போலும்!!
எனினும் "we are indians we don't talk sex!" என்கிற மனோபாவம் இன்னும் பெரும்பான்மையாகவே இருக்கிறது!
இந்த வருட என் calander வெளிவந்து விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சில வாடிக்கையாளர்கள் தில்லியில் இருந்தும் திருப்பூரில் இருந்தும் " என்ன சார் இதை எப்பிடி ஆபீசில் வைக்கறது..சங்கடமாய் இருக்குமே.."என்று நெளிந்தார்கள். இது சங்கடமா அல்லது தர்ம சங்கடமா என்பது அவரவர் பிரச்சினை! ஆனால் அவர்கள் தனிமையில் இரண்டு முறையேனும் பிரித்து மேய்ந்ததை ஒத்துக்கொண்டார்கள்!
நம்மவர்க்கு காமத்துக்கும் நிர்வாணத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை..நிர்வாணம் அழகியல் சம்பந்தப்பட்டது என்கிற தெளிவே இன்னும் வந்த பாடில்லை!!
முக்காடு போட்டு மூடி வைத்த பெண்ணுடலை சந்தர்ப்பம் கிடைக்கையில் பிரித்து மேய்வது என்கிற வகையில்தான் நிர்வாணம் காமப்படுத்தப்பட்டிருக்கிறது இங்கே! இது இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு பின்னர் தோன்றிய மனோபாவமாய் இருக்கலாம் என தோன்றுகிறது..
முலைப் பிளவும் தொப்புள் குழியும் பிருஷ்ட மேடுகளும் தான் பெண்ணுடல் பற்றிய அறிவாய் நம் சினிமாவும் சினிமா பாடல்களும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் நமக்கு திணிக்கின்றன..அழகியல் குறித்தும் மென் ரசனை குறித்தும் நமக்கு இன்னும் ஒரு விழிப்புணர்வு வரவில்லை என்றே நினைக்கிறேன் நான். இதை யார் சொல்லிக்கொடுப்பார்கள் எது இப்போ ரொம்ப அவசியமா என்றெல்லாம் கேள்வி வரலாம்..இது தான் சரியான சந்தர்ப்பம் என ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒத்துக்கொள்வார்கள்! காமமும் அழகுதான்..ஆனால் vulgarity - sensuality க்கும் வித்தியாசம் தெரியாமல் நாம்தடம் மாறி அதை சரி என்று சால்ஜாப்பும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்! அதனால் தான் பகலில், அலுவலகத்தில் ஒரு நெறியும் வார இறுதி இரவுகளில் வேறு நெறியும் என்றும் உள்ளூரில் ஒரு பிம்பம் வெளி ஊர் அல்லது வெளி நாடு சென்றால் வேறொரு பிம்பமுமாய் நம் பேராண்மையை கட்டிக் காத்துக்கொண்டிருக்கிறோம்!!
நிர்வாணம் அழகு ..உடலும் மனமும் நிர்வாணமாய் இருக்கையில் அதற்கு ஒரு தனி அழகு அமைகிறது ..அதை இனம் காணவும் ரசிக்கவும் ஒரு பக்குவப்பட்ட மனநிலை அவசியம்.. முயன்று பாருங்களேன்..கை கூடும்!!5 கருத்துகள்:

 1. உண்மை தான் ஜானி சார். நம் இந்தியா மனோபாவம் அப்படியானதே. பத்திரிக்கைகளில் அந்தரங்க கேள்வி பதில்களை மறைமுகமாக படிப்பது ஒரு உதாரணம்.கற்பழிப்பு ,பிறழ்ந்த குடும்ப உடலுறவுகள் பற்றிய செய்திகள் ஊடங்கங்களில் அதிகம் உலா வருவதும் இம்மனப்பான்மையை காசாக்கிக்கொள்ளும் தந்திரமே. நம் வளர்ப்பு சூழல் இவற்றை பொறுத்தே பார்வையும் அமையும் என்ற வகையில் அவ்வளவு சீக்கிரம் ஆபாசம்- கலை ஆகியவற்றில் இந்தியர்களாகிய நாம் வித்தியாசம் காண்போமா என்பது சந்தேகமே.

  பதிலளிநீக்கு
 2. ஜானி இந்த காலண்டர் விலை என்ன என்றுகூற முடியுமா முடிந்தால் இலவசமாக ஒரு காலண்டர் எனக்கு அனுப்ப முடியும

  பதிலளிநீக்கு
 3. நன்றி சந்துரு ...இன்று என் நண்பரின் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் இந்த காலண்டரை பார்த்து மிகவும் சந்தோசமாய் பாராட்டினாள்..இதுவே தமிழ்நாட்டில் வளர்ந்திருந்தால் சொல்லியிருக்குமா என சந்தேகமே!..

  பதிலளிநீக்கு
 4. வடிவேலன். உங்கள் முகவரி சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன் ..நீங்கள் உங்கள் அலுவலக மேஜையில் அல்லது வீட்டு வரவேற்பறையில் வைப்பதாய் வாக்குறுதி தருவேர்களேயானால்!!

  பதிலளிநீக்கு
 5. நண்பரே கவலை வேண்டாம் என் வீட்டு வரவேற்பரையை உங்கள் நாட்காட்டி அலங்கரிக்கும் அதற்கு என்னுடைய உறுதியை தருகிறேன். என் முகவரியை மின்னஞ்சல் செய்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு